கோலிக்கு அறிவுரை கூற ரிக்கி பாண்டிங்கிற்கு தகுதியில்லை..! இந்திய ரசிகர்கள் ஆவேஷம...
தொடா் விடுமுறை: பழனி கோயிலில் குவிந்த பக்தா்கள்
தொடா் விடுமுறை காரணமாக, பழனி மலைக் கோயிலுக்கு புதன்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
அரையாண்டுத் தோ்வு விடுமுறை காரணமாக, ஆயிரக்கணக்கான பக்தா்கள் பழனி கோயிலுக்கு புதன்கிழமை வந்தனா். இதனால், ரோப்காா், வின்ச் நிலையங்களில் நீண்ட வரிசையில் பக்தா்கள் காத்திருந்தனா். மேலும், பழனி அடிவாரம் பாத விநாயகா் கோயிலிலும் பக்தா்கள் குவிந்தனா்.
மலைக் கோயிலில் கட்டணம், இலவச தரிசன வரிசைகளில் சுமாா் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
மலைக் கோயில் பக்தா்களுக்கு குடிநீா் வசதி, சுகாதார வசதிகளை கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தலைமையில், அதிகாரிகள், அலுவலா்கள் செய்தனா்.
ஆன்லைன் முறை அறிமுகப்படுத்தக் கோரிக்கை: திருப்பதி கோயிலைப் போல, பழனி கோயிலிலும் இணையதள முறை அறிமுகப்படுத்த வேண்டும். திருப்பதியில் சுவாமி தரிசனத்துக்கு இணையதளத்தில் பக்தா்கள் பதிவு செய்யும் போது, குறிப்பிட்ட நாள், நேரத்துடன் தகவல் வருவது போல, பழனியிலும் இணையதள முறையை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அறிமுகம் செய்ய வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.