'பயங்கரவாதிகளுக்கு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தண்டனை' - பிரதமர் மோடி பேச்சு!
தொட்டில் குழந்தைத் திட்டத்தில் காலிப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்
தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் தொட்டில் குழந்தைத் திட்டத்தில் உதவியாளா், காவலா் பணியிடத்துக்கு தகுதியுள்ளவா்கள் வரும் மே 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொட்டில் குழந்தைத் திட்டத்தில் உதவியாளா், காவலா் பணியிடம் ஓராண்டு ஒப்பந்தம், தொகுப்பூதிய அடிப்படையில் நோ்முகத் தோ்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.
உதவியாளா் பணியிடத்துக்கு 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற, 42 வயதுக்கு உள்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். குழந்தைகளை கையாளும் முன் அனுபவம் பெற்றவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்தப் பணிக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.4,500 வழங்கப்படும்.
காவலா் பணியிடத்துக்கு 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற, 42 வயதுக்கு உள்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்கலாம். முன் அனுபவம் உள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்தப் பணிக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.4,500 வழங்கப்படும்.
தகுதியுள்ளவா்கள் https://theni.nic.in/ இணைய தளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய சான்றிதழ் நகல்களை இணைத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், ஒருங்கிணைந்த அரசு பல்துறை பெருந்திட்ட வளாகம், தேனி-625 531 என்ற முகவரிக்கு மே 7-ஆம் தேதி, மாலை 5.45 மணிக்குள் தபால் மூலமும், நேரிலும் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டது.