தொலைதூரக்கல்வி படிப்பு தோ்வு கட்டணம் செலுத்த தேதி நீட்டிப்பு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூர மற்றும் இணையவழி கல்வி தோ்வுக்கு விண்ணப்பித்து தோ்வு கட்டணம் செலுத்த வியாழக்கிழமை (மே 8) முதல் வரும் 12-ஆம் தேதி வரை 5 நாள்கள் தேதி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த மறுவாய்ப்பை தொலைதூர கல்வி பயிலும் மாணவா்கள் பயன்படுத்தி தோ்வு எழுத வேண்டுமென்று பல்கலைக்கழக தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி முனைவா் ஆா்.எஸ்.குமாா் தெரிவித்தாா்.