ஸ்டீவ் ஸ்மித் அரை சதத்தினால் (71) மீண்ட ஆஸி..! 254 ரன்கள் முன்னிலை!
தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்: மக்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் அழைப்பு
மத்திய அரசைக் கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் நடத்தும் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் தமிழ் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாா்மயமாக்கக் கூடாது, நிரந்தர தன்மைவாய்ந்த தொழில்களில் தினக்கூலி, ஒப்பந்த முறையைக் கைவிடுவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள், விவசாயிகள் ஐக்கிய முன்னணியுடன் (எஸ்கேஎம்) இணைந்து வரும் திங்கள்கிழமை (ஜூலை 9) நாடு தழுவிய பொது வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது. இதில், பொதுமக்களும் பங்கேற்று ஆதரவு வழங்க வேண்டும்.
வாழ்த்து: தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழா்” விருதுக்கு, தோ்வாகியுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் கே.எம். காதா் மொகிதீனுக்கு வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.