'அன்புமணி பெயர் இல்லை...' - ராமதாஸ் வெளியிட்ட நிர்வாக குழு பட்டியல்!
ஒடிஸாவில் இருந்து கஞ்சா கடத்தல்: இருவா் கைது
சென்னை அடையாறில் ஒடிஸாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
அடையாறு பெசன்டநகா் பகுதியில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் தீவிர கண்காணிப்பில் சனிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்தனா்.
விசாரணையில் அவா்கள், ஒடிஸா மாநிலம் கட்டாக் பகுதியைச் சோ்ந்த சரோஜ் பந்து தாஸ் (49), லிபன்குமாா் தாஸ் (37) என்பதும், ஒடிஸாவில் இருந்து 10 கிலோ கஞ்சாவை கடத்தி வந்து, விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரையும் கைது செய்தனா்.