'அன்புமணி பெயர் இல்லை...' - ராமதாஸ் வெளியிட்ட நிர்வாக குழு பட்டியல்!
வண்ணாரப்பேட்டையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
மழைநீா் வடிகால் பணியின் காரணமாக, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் திங்கள்கிழமை (ஜூலை 7) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இதுதொடா்பாக சென்னை பெருநகர காவல்துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை மாநகராட்சியின் சாா்பாக பழைய வண்ணாரப்பேட்டை சா் தியாகராய கல்லூரி முதல் டி.எச்.சாலை - கல்லறை சாலை சந்திப்பு வரை மழை நீா் வடிக்கால்களை சீரமைக்கும் பணி நடைபெற இருக்கிறது. இதனால் அந்த சாலைகளில் திங்கள்கிழமை (ஜூலை 7) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இதன்படி, மின்ட் பகுதியிலிருந்து வரும் பேருந்துகள், கனரக வாகனங்கள் டி.எச். சாலை, கல்லறை சாலை சந்திப்பில் திருப்பி விடப்பட்டு கல்லறை சாலை, எம்.எஸ்.கோயில் தெரு, எஸ்.என். சாலை, ஜீவரத்தினம் சாலை வழியாக டி.எச்.சாலை, அப்போலோ மருத்துவமனை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
மின்ட் பகுதியில் இருந்து வரும் இருசக்கர வாகனங்கள், இலகுரக வாகனங்கள் வழக்கம்போல் டி.எச். சாலையை நோக்கி சென்று டி.எச். சாலை, அப்போலோவை அடையலாம்.
டி.எச்.சாலை அப்போலோ மருத்துவமனை சந்திப்பில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் டி.எச். சாலை நோக்கிச் சென்று வழக்கமான பாதையில் சென்று மின்ட் சந்திப்பை அடையலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.