Dhoni : 'இதுக்கெல்லாம் எமோஷனல் ஆகக்கூடாது!' - தோல்வி குறித்து தோனி
தொழிற்துறைக்கான 5 அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின்!
சென்னை குன்றத்தூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகத்தில் தொழில்களையும் தொழில் முனைவோரையும் ஊக்குவிக்க 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.
சென்னையை அடுத்த குன்றத்தூரில் இன்று கலைஞர் கைவினைத் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், மத்திய அரசு கொண்டு வந்த விஸ்வகர்மா திட்டத்தை கடுமையாக எதிர்த்தோம். குலத் தொழிலை ஊக்குவிப்பதாக உள்ளது விஸ்வகர்மா திட்டம். குடும்ப குலத் தொழிலை ஊக்குவித்து வெளியுலகையே காணாமல் இருக்கச் செய்கிறது பாஜக. விஸ்வகர்மா திட்டத்தில் தமிழகம் குறிப்பிட்ட 3 மாற்றங்களை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. மத்திய அரசு கொண்டு வந்த விஸ்வகர்மா திட்டம் சமூக நீதிக்கு எதிரானது. அதில் இணைய குறைந்தபட்ச வயது 18. விஸ்வகர்மா திட்டத்துக்கு மாற்றாக தமிழக அரசு கொண்டுவந்திருப்பதுதான் கலைஞர் கைவினைத் திட்டம் என்று கூறினார்.
மேலும், பொன்னேரியில் நேற்று ஐந்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், குன்றத்தூரில் இன்று தொழில்துறை சார்ந்த 5 அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன்படி, முதல் திட்டம், புவிசார் குறியீடு பெறும் பொருள்களுக்கான மானியம் ரூ.25 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
இரண்டாவது, அம்பத்தூரில் ரூ.5 கோடியில் வாகன மற்றும் உலோகவியல் ஆய்வுக்கூடம் அமைக்கப்படும்.
மூன்றாவது, காஞ்சிபுரத்தில் பழதண்டலத்தில் சாலைக் கட்டமைப்பு, மழைநீர் வடிகால்வாய் போன்ற உள்கட்டமைப்புகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படும்.
நான்காவது, காக்களூர் உற்பத்தி தொழிற்பேட்டையில் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் ஏற்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட ஐந்து அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.