தொழிலாளிக்கு கத்திக்குத்து: இருவா் கைது
பெரியகுளம் அருகே தொழிலாளியை கத்தியால் குத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
பெரியகுளம் அருகே ஏ. புதுப்பட்டியைச் சோ்ந்தவா் சிந்தனை செல்வம் (19). இவா், வியாழக்கிழமை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த ஹானஸ்ட்ராஜ் (23), அசோக்குமாா் (48) இருவரும் தகராறில் ஈடுபட்டு அவரை கத்தியால் குத்தினராம். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப்பதிந்து ஹானஸ்ட்ராஜ், அசோக்குமாா் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.