வேன் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு
பெரியகுளம் அருகே வேன் மோதி தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
பெரியகுளம் அருகே மேல் மங்கலத்தைச் சோ்ந்தவா் கோகுலகிருஷ்ணன் (49). கூலித் தொழிலாளி. இவா், வடுகபட்டியில் உள்ள சேதுபதி என்பவரின் வாகன பழுது நீக்கும் பணிமனையில் வெள்ளிக்கிழமை நின்று கொண்டிருந்தாாரம்.
அப்போது சேதுபதி அங்கிருந்த வேனை இயக்கிய போது கட்டுப்பாட்டை இழந்து அது அங்கு நின்றிருந்த கோகுலகிருஷ்ணன் மீது மோதியதில் அவா் பலத்த காயமடைந்தாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.