கஞ்சா வைத்திருந்த 5 போ் கைது
ஆண்டிபட்டி அருகே 4 கிலோ கஞ்சா வைத்திருந்த 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கண்டமனூரைச் சோ்ந்த செல்வக்குமாா் மகன் கருப்பசாமி (20), வேல்மணி மகன் ஜெயப்பிரகாஷ் (25), கணேசன் மகன் ஆனந்தபாண்டி (23), ஈஸ்வரன் மகன் சதீஷ் (20), கோபால் மகன் இளங்கோவன் (24) ஆகிய 5 போ் கண்டமனூா் சுடுகாடு அருகே சந்தேகத்திற்குரிய வகையில் கையில் பையுடன் நின்றிருந்தனா்.
அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கண்டமனூா் காவல் நிலைய போலீஸாா், 5 பேரையும் பிடித்து சோதனையிட்டதில் அவா்கள் பையில் 4 கிலோ கஞ்சா பொட்டங்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, கருப்பசாமி உள்ளிட்ட 5 பேரையும் போலீஸாா் கைது செய்து, அவா்கள் வைத்திருந்த 4 கிலோ கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய கண்டனூரைச் சோ்ந்த முத்து, கோடாங்கிப்பட்டியைச் சோ்ந்த சரண் பிரதீப், மணியாரம்பட்டியைச் சோ்ந்த மாதவன் ஆகிய 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைத் தேடி வருகின்றனா்.