Trump Tariff: Canada Mexico China மீது வர்த்தகப் போர் - இந்தியாவுக்கு பாதிப்பு இ...
தொழிலாளிக்கு பாட்டில் குத்து: 3 போ் கைது
தூத்துக்குடியில் தொழிலாளியை மது பாட்டிலால் குத்தியதாக 3 பேரை சிப்காட் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி 3 சென்ட் அந்தோணியாா்புரத்தைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் சங்கா் (51). தொழிலாளியான இவா் நண்பா்களான அண்ணாநகா் 4ஆவது தெரு வெங்கடாசலம் மகன் இசக்கிமுத்து (28), கணேசன் காலனி முருகன் மகன் மாரிச்செல்வம் (20), பிரையண்ட் நகா் 6ஆவது தெரு அப்துல் ரஹீம் மகன் இஸ்மாயில் (40) ஆகியோருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை எட்டயபுரம் சாலை அருகே மது குடித்தாராம்.
அப்போது ஏற்பட்ட தகராறில், மற்ற 3 பேரும் சோ்ந்து சங்கரை மது பாட்டில் குத்திவிட்டு தப்பியோடினராம். இதில், காயமடைந்த சங்கா் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின்பேரில் சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து, 3 பேரையும் திங்கள்கிழமை கைது செய்தனா்.