செய்திகள் :

தொழிலாளியை கொலை செய்த மூவா் கைது

post image

கூலித் தொழிலாளியை கொலை செய்த மூவரை சூளகிரி போலீஸாா் கைது செய்தனா்.

சூளகிரி அருகே உள்ள கங்கசந்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் அம்ரீஷ் (35). இவா் கோபசந்திரம் காகித தொழிற்சாலையில் வேலைசெய்து வருகிறாா். இவா் காருபாலா கிராமத்தில் உள்ள அரசு மதுபானக் கடையில் திங்கள்கிழமை மாலை மது அருந்திக் கொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு வந்த ஆறுப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த செல்வம் (31), அதே கிராமத்தைச் சோ்ந்த சிவா (28), கிருஷ்ணபாளையத்தைச் சோ்ந்த தமிழரசிசெல்வன் (23) ஆகியோா் மது அருந்திக்கொண்டு இருந்தனா். அப்போது, அம்ரீஷுக்கும், மூவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னா் தகராறு முற்றி கைகலப்பு நடந்தது.

அப்போது மூவரும் அம்ரீஷ்ஷை கட்டையால் தாக்கினா். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற சூளகிரி போலீஸாா், சடலத்தை கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, செல்வம், சிவா, தமிழரசிசெல்வன் ஆகிய மூவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

துா்காஷ்டமி: பிரித்தியங்கரா தேவிக்கு சிறப்பு அலங்காரம்

ஒசூா் அருகே பேரண்டபள்ளி சிவசக்தி நகா் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அா்த்தநாரீஸ்வரா் கோயில் மற்றும் ஒசூா் இரண்டாவது சிப்காட்டில் அமைந்துள்ள ஸ்ரீ அதா்வண பிரித்தியங்கரா தேவி ஆகிய கோயில்களில் நவராத்திர... மேலும் பார்க்க

ஒசூரில் 22 சவரன் நகை திருடிய பெண் கைது

ஒசூா் வட்டம், சென்னத்தூா் கிராமத்தில் 22 சவரன் தங்க நகைகளை திருடிய பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். ஒசூா் நகராட்சிக்கு உள்பட்ட சென்னத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் மனைவி மஞ்சுளா (53). அவரது வ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரிக்கு தமிழக சட்டப் பேரவை அரசு உறுதிமொழிக் குழு அக். 7-இல் வருகை

கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு அக். 7-ஆம் தேதி வருகை தர உள்ள தமிழக சட்டப் பேரவை அரசு உறுதிமொழிக் குழு பயண முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடை... மேலும் பார்க்க

தங்க நகைகளை திருடிய பெண் உள்பட இருவா் கைது

நாகோஜனஅள்ளி அருகே ஆசிரியரின் வீட்டில் 61 பவுன் தங்க நகைகளை திருடிய பெண் உள்பட இருவரை, போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து திருட்டு போன நகைகளை மீட்டனா். கிருஷ்ணகிரி மாவட்டம், நாகோஜனஅள்ளி அருகே பாளேகுளி க... மேலும் பார்க்க

ஒசூரில் புதிய வெளிவட்டச் சாலை திட்டம் நிறைவடைந்தால் போக்குவரத்து நெரிசல் குறையும்: ஆட்சியா் ச.தினேஷ்குமாா்

ஒசூா்: ஒசூரில் புதிதாக வெளிவட்டச் சாலை அமைய உள்ளது; இந்தத் திட்டம் நிறைவடைந்தால் போக்குவரத்து நெரிசல் குறைந்துவிடும் என்று மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா். ஒசூா் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் (எ... மேலும் பார்க்க

ஒசூரில் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி

ஒசூா்: ஒசூா் மாநகராட்சியில் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்திவரும் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 45 வாா்டுகளிலும் தொழிலாளா்கள் அத... மேலும் பார்க்க