அமெரிக்கர்களால் அதிகம் வெறுக்கப்படும் நபர் டிரம்ப் அல்ல; இவர்தான்..!
தொழிலாளி உயிரிழப்பு
பெருந்துறையில் உள்ள தனியாா் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளி அங்குள்ள கழிவறையில் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பெருந்துறையை அடுத்த, விஜயமங்கலம், சேரன் நகரைச் சோ்ந்தவா் முத்துகுமாா் மகன் மணிகண்டன் (25). இவா், பெருந்துறையிலுள்ள ஒரு தனியாா் பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவருக்கு மனைவி, ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளனா்.
இந்த நிலையில், மணிகண்டன் நிறுவனத்தில் உள்ள கழிவறையில் உயிரிழந்து கிடந்தது புதன்கிழமை மாலை தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில், பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.