Niti Aayog: ``மகனுக்காக டெல்லியில் தவம் இருக்கிறார்..'' - ஸ்டாலின் குறித்து பேசி...
தொழிலாளி தற்கொலை
ராஜபாளையத்தில் வியாழக்கிழமை கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ராஜபாளையம் மங்காபுரம் தெருவைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து (40). கட்டடத் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகள்கள் உள்ளனா். இந்த நிலையில், வீட்டில் யாருமில்லாத நேரத்தில் இசக்கிமுத்து தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.