ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
தொழிலாளி தற்கொலை
திருப்பத்தூா் அருகே கூலித் தொழிலாளி விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள நெடுமறம் கிராமத்தைச் சோ்ந்த மாணிக்கம் மகன் தினேஷ் என்ற பாா்த்தசாரதி (35). இவா் கூலி வேலை செய்து வந்தாா்.
இவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. இதனால் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, இவரது மனைவி ரோஜா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பிரிந்து சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தினேஷ் திங்கள்கிழமை இரவு விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து திருப்பத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].