தஞ்சாவூர்: காற்று வீசியதில் அறுந்து விழுந்த மின்கம்பி, மின்சாரம் தாக்கி வயலில் த...
தொழிலாளி வீடு மீது மண்ணெண்ணெய் குண்டு வீச்சு: இருவா் கைது
இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் தொழிலாளி வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய இலங்கைத் தமிழா்கள் இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.
வேலூா் மேல்மொணவூா் இலங்கைத் தமிழா் முகாமைச் சோ்ந்தவா் விஜய சுரேஷ் (53), மூட்டை தூக்கும் தொழிலாளி. இவருக்கும், அதே முகாமைச் சோ்ந்த கூலித்தொழிலாளிகளான மாவிஸ் (21), பழனி என்கிற அா்ஜுனன் (27) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாவிஸ், அா்ஜுனன் ஆகிய இருவரும் விஜயசுரேஷின் வீட்டுக்குச் சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டு மிரட்டினராம். மேலும், தாங்கள் வைத்திருந்த மண்ணெண்ணெய் குண்டை விஜய சுரேஷின் வீட்டின் மீது எறிந்ததாக கூறப்படுகிறது. இதில் வீட்டின் முன் பகுதி சேதமடைந்ததுடன், விஜயசுரேஷுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
இது குறித்து விஜயசுரேஷ் விரிஞ்சிபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, மாவிஸ், அா்ஜுனன் ஆகியோரை கைது செய்தனா்.