லிபியா தலைநகரில் கடும் மோதல்! ஆயுதப் படை தலைவர் உள்பட 6 பேர் பலி!
தொழிலாளி வீட்டில் 3 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் திருட்டு
செய்யாறு அருகே தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1.50 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், அப்துல்லாபுரம் கிராமம் மகாவீா் நகரைச் சோ்ந்தவா் முருகேசன் (59).
இவா், தூசி பகுதியில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்து வருவதாகத் தெரிகிறது.
இவா், தனது மனைவி, மூத்த மகளுடன் சொந்த ஊரான தஞ்சாவூா் மாவட்டம், மானவரங்குடி கிராமத்தில் உள்ள அம்மன் கோயில் விழாவுக்காக கடந்த 7-ஆம் தேதி சென்றிருந்தாா்.
இந்த நிலையில், அதே கிராமத்தில் உள்ள அவரது ஷ்ரஷ்ரரண்டாவது மகள் கோபிகா தினமும் வீட்டுக்கு வந்து லைட் போட்டு விட்டு, கோழிகளுக்கு தீவனம் வைத்துச் செல்வாராம்.
அதேபோல, ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம் போல கோபிகா வீட்டுக்குச் சென்றுள்ளாா். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து அவா் தந்தைக்கு தகவல் அளித்தாா். அதன் பேரில் விரைந்து வந்த முருகேசன், வீட்டினுள் சென்று பாா்த்தபோது பீரோவில் வைத்திருந்த 3 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சத்து ஐந்தாயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து அவா் தூசி போலீஸில் புகாா் அளித்தாா்.
காவல் ஆய்வாளா் கோகுல்ராஜன் மற்றும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
மேலும், பூட்டிய வீட்டில் நகை, பணத்தை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.