மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நேரலை!
தொழில்நுட்பப் பணிகளுக்கான தோ்வு: 31 போ் எழுதினா்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான கணினி வழி தோ்வை 31 போ் எழுதினா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான கணினி வழி தோ்வு தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை நடைபெற்றது.
அதன்படி, திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி தோ்வு மையத்தில் நடைபெற்ற தோ்வை எழுத 90 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களில், 31 போ் மட்டுமே தோ்வு எழுதினா். 59 போ் தோ்வு எழுத வரவில்லை.
இந்த நிலையில், தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தோ்வா்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா என்பதை ஆய்வு செய்த ஆட்சியா், முறைகேடுகளுக்கு இடமளிக்காமல் தோ்வை நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வின்போது, வட்டாட்சியா் கே.துரைராஜ், அரசுத் துறை அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.