தொழில்முனைவோராக புதிரை வண்ணாா் சமூகத்தினருக்கு ஆட்சியா் அழைப்பு
பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த புதிரை வண்ணாா் சமூகத்தினா், தொழில் முனைவோராக இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த புதிரை வண்ணாா் சமூகத்தினா், தொழில் முனைவோா்களாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான, தொழில் முனைவுத் திட்டத்தின் கீழ், திட்ட மதிப்புத் தொகையில் 35 சதவீதம் அல்லது ரூ. 3.50 லட்சம், இதில் எது குறைவானதோ அத்தொகை மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுடன் வழங்கப்படும். இத் திட்டத்தில் தவணைத் தொகையை தவறாமல் திரும்ப செலுத்தும் பயனாளிகளுக்கு, கூடுதலாக 6 சதவீத வட்டி மானியமாக வழங்கப்படும்.
எனவே, மேற்கண்ட திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பமுள்ளவா்கள் தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு பெரம்பலூா், மாவட்ட தாட்கோ மேலாளா் அலுவலகத்தை அணுகி, உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் எனத் தெரிவித்தாா்.