செய்திகள் :

தோட்டங்களில் காணப்படும் முடியில்லா 'ஸோம்பி அணில்கள்’ - மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா?

post image

அமெரிக்காவில் பொதுவாக அழகாகக் கருதப்படும் அணில்கள், தற்போது புண்கள் மற்றும் முடியில்லாமல் ‘ஸோம்பி அணில்கள்’ என்று அழைக்கப்படும் வினோதமான தோற்றத்தில் காணப்படுகின்றன.

இந்த அசாதாரண நிலைக்கு ஸ்குரல் ஃபைப்ரோமாடோசிஸ் (squirrel fibromatosis) என்ற வைரஸ் காரணம் என்று வனவிலங்கு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட அணில்களை மனிதர்கள் தொடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

‘ஸோம்பி அணில்கள்’ என்றால் என்ன?

`ஸ்குரல் ஃபைப்ரோமாடோசிஸ்' என்ற வைரஸ் அணில்களைத் தாக்குவதால் , அவற்றின் தோலில் புரையோடு கட்டிகள் ஏற்படுகின்றன. இந்தக் கட்டிகள் சீழ் வடியக்கூடியவையாக உள்ளன. இதனால் அணில்கள் புண்கள் மற்றும் முடியில்லாத பகுதிகளுடன் ‘ஸோம்பி’ போன்ற தோற்றத்தைப் பெறுகின்றன என்று LADBible இதழ் தெரிவிக்கிறது.

‘Zombie Squirrels’

டெய்லி மெயில் இதழின்படி, 2023 ஆம் ஆண்டு முதல் இத்தகைய அணில்கள் வனப்பகுதிகளிலும் தோட்டங்களிலும் காணப்படுவதாக மக்கள் அறிவித்து வருகின்றனர்.

பெரும்பாலான அணில்கள் இந்த நோயிலிருந்து குணமடைந்தாலும், சில சந்தர்ப்பங்களில் இந்த வைரஸ் உள் உறுப்புகளைத் தாக்கி, அணில்களின் மரணத்திற்கு வழிவகுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வனவிலங்கு நிபுணர்களின் கூற்றுப்படி, ``தோட்டங்களில் பறவைகளுக்கு உணவு வைக்கப்படும் பறவை உணவுப் பாத்திரங்கள் இந்த நோய் பரவுவதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். இந்த இடங்களில் அணில்கள் ஒன்று கூடுவதால், நோய் ஒரு அணிலிலிருந்து மற்றொரு அணிலுக்கு எளிதில் பரவுகிறது" என்று கூறுகின்றனர்.

மனிதர்களுக்கு ஆபத்து உள்ளதா?

இந்த வைரஸ் மனிதர்களை பாதிப்பதில்லை. இருப்பினும், பாதிக்கப்பட்ட அணில்களைத் தொடுவதையோ அல்லது அவற்றுக்கு உதவ முயற்சிப்பதையோ தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த அணில்கள் தாமாகவே குணமடைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்ற மற்றொரு நோய்

இதற்கு முன்னர், அமெரிக்காவில் முயல்கள், ஷோப் பாபிலோமா வைரஸ் (CPRV) என்ற நோயால் பாதிக்கப்பட்டு, தலையில் மோசமான கட்டிகளுடன் காணப்பட்டதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன. இந்த நோயும் அணில்களைப் பாதிக்கும் வைரஸைப் போலவே வினோதமான தோற்றத்தை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறைந்த மதிப்பெண்; பெற்றோருக்கு பயந்து மும்பை கிளம்பிய கர்நாடக சிறுமிகள் - மீட்டது எப்படி?

நடிகர்களை பார்க்கவேண்டும் என்ற ஆசையில் அடிக்கடி மைனர் சிறார்கள் மும்பைக்கு வருவது வழக்கம். ஆனால் கர்நாடகாவை சேர்ந்த இரண்டு மைனர் சிறுமிகள் பள்ளி தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் பெற்றோருக்கு பயந்... மேலும் பார்க்க

25 கோடி ரூபாய் மதிப்பில் தேநீர் பாத்திரம் - உலகின் மிக விலையுயர்ந்த தேநீர் பாத்திரமாக இருப்பது ஏன்?

ஒரு தேநீர் பாத்திரம், பல ஆடம்பர கார்களை விட மதிப்பு மிக்கதாக இருக்க முடியுமா? “தி ஈகோயிஸ்ட்” என்ற இந்த தேநீர் பாத்திரம், உலகின் மிக விலையுயர்ந்த தேநீர் பாத்திரமாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் 2016ஆம... மேலும் பார்க்க

ரூ.2.96 கோடி ஓய்வு பணம்; மனைவியை தவிர்த்து தனியே வாழ்ந்த நபர் - கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?

ஓய்வுக்காலத்தில் தனது மனைவியை விட்டுப் பிரிந்து தனியாக வாழ முடிவு செய்த ஒரு ஜப்பானிய ஆணின் கதை சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.ஜப்பானைச் சேர்ந்த டெட்சு யமடா என்பவர் தனது 60 வயதில் ஓய்வு பெற்றிருக்கிறார... மேலும் பார்க்க

மும்பை: ஒரு கப் தேனீர் ரூ.1000: ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் பில் பார்த்து அதிர்ச்சியான வெளிநாட்டு இந்தியர்!

இந்தியாவை சேர்ந்த பரிசிட் பலூசி என்பவர் துபாயில் நீண்ட நாட்களாக வசித்து வருகிறார். அங்கேயே குடும்பத்தோடு செட்டில் ஆகிவிட்டார். இந்தியாவிற்கு தனிப்பட்ட பயணமாக வந்திருந்தார். அவர் மும்பையில் வந்து இறங்க... மேலும் பார்க்க

"என்னை ஏன் திருமணம் செய்தாய்?" - வைரலாகும் அமெரிக்க பெண்ணின் கேள்வியும், இந்தியரின் பதிலும்!

இந்தியர் ஒருவர் தனது அமெரிக்க மனைவியிடம், அவரைத் திருமணம் செய்துகொண்டதற்கான காரணத்தை விளக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.அந்த வீடியோவில் வரும் கணவன் மனைவியின் பெயர் அனிக... மேலும் பார்க்க

உ.பி: சட்டமன்ற வளாகத்தில் இடையூறாக நின்ற அமைச்சர் கார் - கிரேன் மூலம் அப்புறப்படுத்திய போலீஸார்!

உத்தரப்பிரதேச சட்டமன்ற வளாகத்திற்குள் அமைச்சர் சஞ்சய் நிஷாத் தனது காரை வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டு இருந்த இடத்தில் நிறுத்தி இருந்தார். அவர் காரை வழக்கமான வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நிறுத்த... மேலும் பார்க்க