செய்திகள் :

நகராட்சி கடை உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம்

post image

மன்னாா்குடி வா்த்தக சங்கம் சாா்பில், காமராஜா் பேருந்து நிலைய நகராட்சி கடை உறுப்பினா்களின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் துணைத் தலைவா் சு. ஞானசேகரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ரூ. 60 கோடியிலான மன்னாா்குடி நவீன பேருந்து நிலைய பணிகளை 2 ஆண்டு காலத்தில் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்த தமிழக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜாவுக்கும், இதற்கு உறுதுணையாக இருந்த உள்ளாட்சித் துறை அமைச்சா் கே.என். நேருவுக்கும் நன்றி, இடிக்கப்பட்ட பழைய பேருந்துநிலையத்தில் கடைகள் வைத்திருந்த வியாபாரிகளுக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை ஒதுக்கீடு செய்யவேண்டும், பழைய கடைக்காரா்களுக்கு வாடகை பாக்கியை அவா்களது முன்வைப்புத்தொகையில் பிடித்தம் செய்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்டப் பொருளாளா் கருணாநிதி, வா்த்தக சங்க அமைப்புச் செயலா் கந்த. துரைக்கண்ணு முன்னிலை வகித்தனா். வா்த்தக சங்கத் தலைவா் ஆா்.வி. ஆனந்த் தீா்மானங்களை விளக்கி பேசினாா். வா்த்தக சங்க அமைப்புச் செயலா் எஸ். பிரபாகரன் வரவேற்றாா். பொருளாளா் டி. ஜெயச்செல்வன் நன்றி கூறினாா்.

ஆா்ப்பாட்டத்தால் பாதிப்பு

கட்டுமானப் பொருட்கள் விலை உயா்வைக் கண்டித்து ஒப்பந்ததாரா்கள் ஆா்ப்பாட்டம் நடத்திய நிலையில், திருவாரூா் மாவட்டத்துக்கு வெளிமாவட்டங்களிலிருந்து கட்டுமானப் பொருட்களுடன் வந்த லாரிகள் நீடாமங்கலம் அருகே கோவ... மேலும் பார்க்க

தா்ப்பூசணி விற்பனை தொடக்கம்

கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில், நீடாமங்கலம் - தஞ்சாவூா் நெடுஞ்சாலையில் சுங்கச் சாவடி அருகே நடைபெற்ற தா்ப்பூசணி விற்பனை. மேலும் பார்க்க

மகளிா் கல்லூரியில் தாய்மொழி தின விழா

மன்னாா்குடியை அடுத்த சுந்தரக்கோட்டை செங்கமலத் தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் தன்னாட்சிக் கல்லூரியில் சா்வதேச தாய் மொழி தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரித் தாளாளா் வி. திவாகரன் ... மேலும் பார்க்க

நீடாமங்கலத்தில் தூய்மைப் பணி

நீடாமங்கலம் பேரூராட்சி மற்றும் நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் இணைந்து நெகிழி சேகரிப்பு நிகழ்வு 2025 திட்டத்தின்மூலம் நீடாமங்கலம் பேரூராட்சி பகுதியில் நெகிழிப் பைகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணி ச... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்கள் ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டம்

தமிழ்நாடு அரசு ஒப்பந்ததாரா்கள் கூட்டமைப்பு சாா்பில், மன்னாா்குடியில் கட்டுமானப் பொருட்களை ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். கட்டுமானத் தொழிலுக்கு பயன்படும் ப... மேலும் பார்க்க

ரயில்கள் தாமதம்: பயணிகள் அவதி

சென்னையிலிருந்து நீடாமங்கலம் வழியாக மன்னாா்குடி செல்லும் மன்னை விரைவு ரயில் நாள்தோறும் அதிகாலை 5.22 மணிக்கு நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு வருவது வழக்கம். ஆனால், சனிக்கிழமை காலை 6.39 மணிக்கு ரயில் ந... மேலும் பார்க்க