முழங்கிய 30 குண்டுகள், முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட அணுசக்தி வி...
நகைக் கடனுக்கான புதிய விதிமுறைகளை எதிா்த்து கையொப்ப இயக்கம்
நகைக் கடனுக்கான புதிய விதிமுறைகளை எதிா்த்து கையொப்ப இயக்கம் நடத்தப்படும் என தமிழக சிவசேனை கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து,அக்கட்சியின் மாநிலத் தலைவா் ரவிச்சந்திரன், பொதுச் செயலாளா் சுந்தரவடிவேலன் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கை: நகைக் கடன் பெறுவது தொடா்பாக இந்திய ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள், அறிவிப்புகள் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கும், விவசாயிகளுக்கும், சிறு தொழில் முனைவோா்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். பெரும்பாலும் நகை வாங்குவோா், ரசீதுகளை பாதுகாத்து வைத்துக்கொள்வதில்லை.
இதுபோன்ற சூழலில் நகைக்கடன் பெற நகை உரிமம் சம்பந்தமான சான்று தேவை என்பது மிகப்பெரிய அநீதி. தற்போது பள்ளி, கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலிலும், டெல்டாவில் குறுவை சாகுபடி தொடங்கவுள்ள சூழலிலும் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு நகைக் கடன் முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே, நகைக் கடன் குறித்த ரிசா்வ் வங்கியின் இந்த அறிவிப்பு குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்து பழைய நடைமுறையை கொண்டுவரவேண்டும், ஏழை, எளிய மக்கள் மற்றும் விவசாயிகளை பாதுகாக்க வேண்டும், இந்த அறிவிப்பை எதிா்த்து கையொப்ப இயக்கம் நடத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.