செய்திகள் :

நகைக் கடன் புதிய விதிகளை திரும்பப் பெற வேண்டும்: விஜய்

post image

நகைக்கடன் புதிய வரைவு விதிகளை ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஏழை, நடுத்தர மக்களின் ஆபத்பாந்தவனாக விளங்கும் நகைக்கடன் பெறும் வழிமுறைகளைத் திருத்தி, புதிதாக 9 விதிமுறைகள் வெளியிட்டிருப்பதை ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

உலகிலேயே தங்கத்தை அதிகமாக நுகரும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருப்பது இந்தியா தான். இந்தியர்கள், தங்கத்தைத் தங்கள் சொத்தின் ஒரு பகுதியாகக் கருதுகின்றனர். தங்கம் என்பது திருமணம் போன்ற இன்ன பிற விசேஷ நிகழ்ச்சிகளின்போது மட்டுமே ஆபரணமாக அணியப்படுகிறது. மற்றபடி, தங்க நகைகளை ஏழை, நடுத்தர மக்கள், வாகனம், நிலம், வீடு போன்ற அசையும் மற்றும் அசையாச் சொத்துகள் வாங்குவதற்கும், கல்வி, விவசாயம், மருத்துவம் போன்ற அத்தியாவசியச் செலவுகளுக்கும் வங்கிகளில் அடமானம் வைத்துத்தான் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய விதிகளில், தங்க நகையை அடமானம் வைப்பவர்கள், அதற்கான உரிமையாளர்கள் தாங்கள்தான் என்பதற்கான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட தங்க நாணயங்கள் மட்டுமே அடமானத்துக்கு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

நகைகளை வாங்கியதற்கான ரசீது இல்லாதவர்கள், அதற்குப் பதிலாக வேறு ஆவணங்களையோ, உறுதிமொழிச் சான்றையோ அளித்துக் கடன் பெறலாம் என்றும், அவற்றில் சந்தேகம் இருந்தால் கடன் வழங்கக் கூடாது என்றும் சொல்லியிருப்பதால், நகைக்கடன் மறுக்கப்படும் சூழல் உருவாகும். ஏனெனில், பல குடும்பங்களில் இன்றும் பாட்டியின் நகைகளே தாய்க்கும் அவரது மகளுக்கும் மருமகளுக்கும் கொடுக்கப்பட்டு வரும் நடைமுறை, பல தலைமுறைகளாக இருந்து வருகிறது. அப்படியிருக்கையில், அவற்றிற்கான ரசீதையோ, ஆவணத்தையோ அவர்கள் எங்குபோய்ப் பெற முடியும்?

மேலும், ஒரு பக்கம் தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு எகிறிக்கொண்டிருக்க, மறுபக்கம் தங்கத்தை அடமானம் வைத்துப் பெறப்படும் தொகையோ குறைந்துகொண்டே போனால், மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்பது ரிசர்வ் வங்கிக்குத் தெரியாதா?

ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளில், கடன் தொகை வழங்கும் அளவானது தங்கத்தின் மொத்த மதிப்பில் இருந்து 75 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கடன் தொகையையும் குறைத்தால், பணம் அதிகம் தேவைப்படுவோர் அதிக வட்டி வசூலிக்கும் தனியார் நிதி நிறுவனங்களையும், கந்து வட்டிக் கும்பலையுமே நாடிச் சென்று தங்க நகைகளை அடகு வைக்கும் சூழல் ஏற்படும். இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள், மீளாத் துயருக்கு ஆளாக நேரிடும்.

கேரளம்: கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல்! பொதுமக்களுக்கு பேரிடர் மேலாண்மை எச்சரிக்கை!

ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளில் இத்தகைய நடைமுறைச் சிக்கல்கள் ஒரு புறம் இருக்க, வங்கிகளால் விற்பனை செய்யப்படும் தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் பெற முடியும் என்பது போன்ற புதிய விதி, மக்களை மேலும் இன்னலுக்கு உள்ளாக்கும். இந்தப் புதிய விதியால், வேறு ஆதாரங்களில் இருந்து தங்க நாணயங்களை வாங்கியவர்கள் நகைக் கடன் பெற முடியாத சூழல் உருவாகி உள்ளது.

மேலும், ஏற்கெனவே நகைக்கடன் பெற்றவர்கள் அதற்கு வட்டித் தொகை மட்டுமே செலுத்தி அதை அப்படியே புதுப்பித்துக் கொள்ள முடியாது என்றும், அடகு வைத்த நகையை முழுவதுமாக மீட்டு, அடுத்த நாள் தான் மீண்டும் அடகு வைத்துக் கடன் பெற முடியும் என்ற புதிய நிபந்தனையால் மக்கள் இன்னும் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாவர்.

எனவே, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய வரைவு விதிகளை முழுவதுமாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் நகைக் கடன் பெறுவதில் பழைய நடைமுறையே தொடரும் என்று அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து!

சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் இன்று(மே 25) அதிகாலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அம்மாப்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையொன்று இயங்கி வருகிறது. இங்கு திடீரென... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2878 கன அடியாக குறைந்தது.காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறையத் தொடங்கியது.நேற்று(மே 24) காலை மேட... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மத்திய மேற்கு மற்றும் வடக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மே 27-ஆம் தேதி உருவாக... மேலும் பார்க்க

ஜூன் இறுதிக்குள் 234 தொகுதிகளுக்கும் நாதக வேட்பாளா்கள் அறிவிப்பு: சீமான்

வரும் ஜூன் மாத இறுதிக்குள் 234 தொகுதிகளுக்கான நாதக வேட்பாளா்கள் அறிவிக்கப்படுவா் என்று கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா். சென்னையில் முன்னாள் பேரவைத் தலைவா் சி.பா.ஆதித்தனாரின் நினைவு தி... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற வன அதிகாரியிடம் ரூ. 6.58 கோடி ஆன்லைன் மோசடி: கேரளத்தைச் சோ்ந்த மூவா் கைது

சென்னையில் ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரியிடம் ரூ. 6.58 கோடி மோசடி செய்ததாக கேரளத்தைச் சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்டனா். ஆன்லைன் பங்கு வா்த்தகத்தில் ஈடுபட்டால் குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என்... மேலும் பார்க்க

தில்லிக்கு வெள்ளைக் கொடியுடன் முதல்வா் சென்றுள்ளாா்: தமிழிசை

தில்லிக்கு வெள்ளைக் கொடியுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளாா் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா். சென்னை வடபழனியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் மணிவாசகா் பதிப்பகத்த... மேலும் பார்க்க