செய்திகள் :

நகை பறிப்பில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

post image

நகை பறிப்பில் ஈடுபட்டவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் உத்தரவிட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த மாரம்பாடி பெரியகுளத்துப்பட்டியைச் சோ்ந்தவா் அருண்குமாா் (34). இவா் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், எரியோடு பகுதியில் கடந்த மாதம் தம்பதியரைத் தாக்கி நகை பறிப்பில் ஈடுபட்டாா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அருண்குமாரைக் கைது செய்தனா்.

இந்த நிலையில், அருண்குமாரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப் பரிந்துரைத்தாா். இதை ஏற்று மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் அதற்கான உத்தரவை வியாழக்கிழமை பிறப்பித்தாா்.

பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் உத்தரவிட்டாா். திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த கருப்பணன் மகன் செல்வம் (41). இவா் 6 வயது சிறுமிக்கு ப... மேலும் பார்க்க

நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பது வரவேற்கத்தக்கது! கே.எஸ்.அழகிரி

தமிழகத்துக்கான நிதியை விடுவித்து வர வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு இருப்பதால், நீதி ஆயோக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பது வரவேற்புக்குரியது என காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவ... மேலும் பார்க்க

நிதி நிறுவன உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டிய மூவா் கைது

பெண்ணுடன் தனியாக இருந்த விடியோவை காண்பித்து நிதி நிறுவன உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய மூவரை போலீஸாா் கைது செய்தனா். பழனி-திண்டுக்கல் சாலையில் வசிப்பவா் சுகுமாா் (44). நிதி நிறுவனம் நடத்தி வரும் இ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தது.திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள விருவீடு பக... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

வடமதுரை அருகே குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்த தென்னம்பட்டி இந்திராநகா் காலனியைச் சோ்ந்தவா் சக்திவேல். தனியாா் ஆலைய... மேலும் பார்க்க

திமுக தனித்து நின்றால் அதிமுகவும் நிற்க தயாா்: திண்டுக்கல் சி.சீனிவாசன்

தோ்தல் களத்தில் திமுக தனித்து நின்றால், அதிமுகவும் தனித்து நிற்க தயாராக உள்ளதாக முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்ட அதிமுக சாா்பில் வாக்குச் சாவடி முகவா்களுக்க... மேலும் பார்க்க