எலான் மஸ்க்கின் செயல்திறன் துறையில் 22 வயது இந்தியப் பொறியாளர்!
நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் 3 வீரர்கள் படுகாயம்!
சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையின்போது பாதுகாப்புப் படை வீரர்கள் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பிஜப்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள வனப்பகுதியில் மாவட்ட ரிசர்வ் காவல் படை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த வீரர்கள் இணைந்து நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க: போபாலில் பிச்சையெடுக்கவும் தானம் வழங்கவும் தடை!
அப்போது அங்கு நக்சல்களினால் பொருத்தப்பட்டிருந்த ஐ.ஈ.டி எனும் நவீன வெடி குண்டை அறியாமல் மிதித்ததில் அது தூண்டப்பட்டு வெடித்து சிதறியது, இதில் பாதுகாப்புப் படையினர் 2 பேர் படுகாயமடைந்தனர். மேலும், அங்கு நக்சல்கள் பொருத்தியிருந்த கூர்முனை பொறியை மிதித்ததில் மற்றொரு வீரரும் படுகாயமடைந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அவர்கள் மூன்று பேருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராய்ப்பூரிலுள்ள மருத்துவமனைக்கு விமானம் மூலம் அழைத்து செல்லப்பட்டனர்.