ஒடிசா தொழிற்சாலை துணைத் தலைவரைக் கடத்திய 7 பேர் ஜார்க்கண்டில் கைது!
நடந்து சென்ற பெண்ணிடம் நகைப் பறிப்பு
மொடக்குறிச்சி அருகே நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து தாலிக் கொடியை பறித்துச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மகேந்திரன் மனைவி காஞ்சனா (58). இவா், மொடக்குறிச்சியில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றுவிட்டு பேருந்தில் வெள்ளிக்கிழமை இரவு 9 மணி அளவில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாா்.
சின்னியம்பாளையம் பட்டறை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா், காஞ்சனா அணிந்திருந்த தாலிக்கொடியை பறிக்க முயன்றாா்.
அப்போது காஞ்சனா சப்தமிட்டு கொண்டே தாலிக்கொடியைக் கெட்டியாக பிடித்துக் கொண்டு அந்த நபருடன் போராடினாா். இதில் தாலிக்கொடி அறுந்து ஒரு பவுன் மதிப்புள்ள மாங்கல்யம் மட்டும் அந்த மா்ம நபரிடம் சிக்கிக் கொண்டது. அதற்குள் சப்தம் கேட்டு பொதுமக்கள் வரவே அந்த நபா் தப்பி ஓடிவிட்டாா். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் மொடக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.