தூத்துக்குடி: நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விலை உயர்வு
நடிப்புக்கு உயரம் தடையா? தாமதமாகும் வாய்ப்பு குறித்து குஷ்பு மகள் உருக்கம்!
நடிகைக்காக வரையறைக்குள் தான் இல்லை என நடிகை குஷ்புவின் மகள் அவந்திகா தெரிவித்துள்ளார்.
உயரமாக இருப்பதால், படவாய்ப்புகள் வருவதற்குத் தாமதமாவதாகவும், முதல் வாய்ப்புக்காக நீண்ட நாள்கள் காத்திருப்பதாகவும் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த குஷ்பு - இயக்குநர் சுந்தர். சி, தம்பதிக்கு மகளாகப் பிறந்தவர் அவந்திகா. லண்டனில் முறைப்படி நடிப்பைப் பயின்ற இவர், சினிமா வாய்ப்புக்காகத் தன்னை தயார்படுத்தி வருகிறார்.
சினிமாவில் நாயகியாக மட்டுமில்லாமல், சிறந்த நடிகையாக வர வேண்டும் என்பதைக் கனவாகக் கொண்ட அவந்திகா, சினிமாவில் பிரபலங்களின் வாரிசாக இருந்தும் தனக்கு சினிமா வாய்ப்பு கிடைக்காதது ஏன்? என்பது குறித்து ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியின் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ''எந்தவொரு மொழியிலும் நடிப்பதற்கு நான் தயாராக உள்ளேன். நல்ல கதைகளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவை நிச்சயம் கிடைக்கும் என நம்புகிறேன்.
நடிகை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரையறை இங்கு உள்ளது. அதற்குள் நான் இல்லை என்பது எனக்குத் தெரியும். என் உயரமே எனது நடிப்பு வாய்ப்புக்குத் தடையாக உள்ளது. அதிகப்படியான உயரத்தால் எனது முதல் வாய்ப்புக்காக நீண்ட நாள்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
என்னுடைய பதின்ம பருவத்தில் அதிகப்படியான உடல் எடையுடன் இருந்தேன். கண்ணாடி அணிந்திருந்தேன். ஆனால், அவற்றில் இருந்து மெல்ல மெல்ல நான் என்னைத் தயார்படுத்திவருகிறேன்.
எனது பெற்றோர் சினிமாவில் நட்சத்திரங்களாக இருப்பதால் என்னால் எளிமையாக வாய்ப்பை உருவாக்க முடியும் என்பது உண்மைதான். ஆனால், அதனைச் செய்ய நான் விரும்பவில்லை. என் பெற்றோருக்கும் என் முயற்சியில்தான் மகிழ்ச்சி அடைகின்றனர்'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | குஷ்பு நடிக்கும் புதிய தொடரின் பெயர் அறிவிப்பு!