நடுவானில் இயந்திரக் கோளாறு- விமானம் தரையிறக்கம்
நடுவானில் இயந்திரக் கோளாறு காரணமாக புறப்பட்ட சில நிமிடங்களில் இண்டிகோ விமானம் மீண்டும் சென்னையிலேயே தரையிறக்கப்பட்டது.
165 பயணிகளுடன் அசாம் மாநிலம், குவகாத்திக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் நடுவானில் இயந்திரக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது.
பொங்கல்: அரசு பேருந்துகளில் 8.73 லட்சம் பேர் பயணம்
உடனே அந்த விமானம் மீண்டும் சென்னையிலேயே தரையிறக்கப்பட்டது. பின்னர் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட நிலையில் அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.