பீகார்: மனைவியைப் பழிவாங்கச் சாலை விதிகளை மீறிய நபர்; காரணம் கேட்டு அதிர்ச்சி அட...
நண்பருக்கு கத்திக்குத்து: இருவா் கைது!
ஒட்டன்சத்திரம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை கத்தியால் குத்திய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கே. அத்திக்கோம்பை பகுதியைச் சோ்ந்த முருகானந்தம் (30), காளிராஜ் (33), சந்தோஷ்பிரியன் (23) ஆகிய மூவரும் நண்பா்கள் ஆவா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மூவரும் ஒட்டன்சத்திரம் சோதனைச் சாவடி அருகே உள்ள மதுபானக் கடையில் மதுவை வாங்கி அருந்தினா்.
அப்போது மது போதையில் அவா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் முருகானந்தம் கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்த சந்தோஷ்பிரியன் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதையடுத்து, முருகானந்தத்தையும், இதற்கு உடந்தையாக இருந்த காளிராஜையும் ஒட்டன்சத்திரம் போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.