செய்திகள் :

நந்தலாலா மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

post image

கவிஞர் நந்தலாலா மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கவிஞரும் பட்டிமன்றப் பேச்சாளருமான நந்தலா, இதய அறுவை சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

இதையும் படிக்க : கவிஞர் நந்தலாலா காலமானார்!

இவரின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர் சங்கத்தின் துணைத் தலைவரும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினருமான கவிஞர் நந்தலாலா மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

தமிழ்நாட்டின் புத்தகத் திருவிழாக்கள், முற்போக்கு மேடைகள், தொலைக்காட்சி விவாதங்கள், பட்டிமன்றங்கள் எனக் கவிஞர் நந்தலாலாவின் குரல் ஒலிக்காத மேடையே இல்லை எனும் அளவுக்கு அனைத்து உணர்ச்சிகளையும், அரிய தகவல்களையும் தமது பேச்சில் வெளிப்படுத்தும் திறம் பெற்றவர் அவர்.

காவிரிக்கரையின் மைந்தனான கவிஞர் நந்தலாலா தமது ஊரான திருச்சியின் மீது கொண்ட தீராக்காதலுக்கு, “திருச்சிராப்பள்ளி: ஊறும் வரலாறு” நூலே சான்றாகும்.

அவரது ஆற்றல் தமிழ்ச் சமூகத்துக்கு மேலும் பயனளிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினராகவும் அவரை நியமித்திருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தை பெரியார் மீது பெரும் பற்றும், பேரறிஞர் அண்ணா மீது பெருமதிப்பும், தலைவர் கலைஞர் மீது மிகுந்த அன்பும் கொண்டிருந்தவர் கவிஞர் நந்தலாலா. கலைஞர் குறித்து, “தாம் வாழ்ந்த காலம் முழுதும், மானமும் அறிவும்; துணிச்சலும் செயலுமாக வாழ்ந்தவர் கலைஞர். உரிமை மீட்புப் போரில் அவரே நமக்கு என்றும் போர்வாள்” என்று உண்மை இதழில் அவர் எழுதிய சொற்களை மறக்க முடியாது. என் மீதும் மிகுந்த மரியாதையும் பாசமும் கொண்டிருந்தார். எனது பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பரந்த மனத்தோடும் அன்போடும் வாழ்த்திப் பேசியதையும் இவ்வேளையில் நினைவுகூர்கிறேன்.

மேலும் பல்லாண்டுகள் தமிழ்ச் சமூகத்துக்கு அருந்தொண்டாற்றவிருந்த அவர் மறைந்துவிட்டார் என்பது வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர் சங்கத்தினருக்கும், தமிழன்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் விளையாட்டில் ரூ.50 லட்சம் இழப்பு: குழந்தைகளுடன் தாய் தற்கொலை? கணவர் மாயம்!

நாமக்கல்லில் ஆன்லைன் விளையாட்டில் ரூ.50 லட்சத்தை கணவர் இழந்த விரக்தியில் தனது இரு குழந்தைகளுடன் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவரது கணவர் மாயமானதால் சந்தேக அடிப... மேலும் பார்க்க

சத்தியம் வெல்லும்: விஜயகாந்த் எக்ஸ் பக்கத்தில் வெளியான பதிவு!

சத்தியம் வெல்லும்; நாளை நமதே என மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிடப்பட்டது. எனினும் சிலநிமிடங்களில் அந்தப் பதிவு நீக்கப்பட்டுவிட்டது.தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவ... மேலும் பார்க்க

மன்னார்குடி: கோயில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அண்ணாமலை நாதர் சன்னதி தெருவில் உள்ள அண்ணாமலை நாதர் கோயிலுக்கு சொந்தமான குளம் உள்ளது. செவ்வாய்க்கிழமை இந்தக் குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததால் குடிநீர் விநியோக தண்... மேலும் பார்க்க

நாமக்கல்: வீட்டிலிருந்து தாய், மகன், மகள் சடலமாக மீட்பு

நாமக்கல் மாவட்டத்தில் ஒரு வீட்டிலிருந்து தாய், மகன், மகள் என மூன்று பேரின் சடலங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் வங்கி ஊழியர் பிரேம் ராஜின் மனைவி, மகன், மகள் என்ப... மேலும் பார்க்க

தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவதாக எப்போது கூறினோம்? இபிஎஸ்

தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவதாக எப்போது கூறினோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.கடந்த மக்களவைத் தேர்தல் கூட்டணியின்போது தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவத... மேலும் பார்க்க

ரூ. 1500 கடனுக்காக தகராறு... கீழே தள்ளிவிட்டதில் இலங்கை அகதி பலி!

சூலூர்: கொடுத்த பணத்தைக் கேட்டபோது ஏற்பட்ட தகராறில், கீழே தள்ளிவிடப்பட்ட இலங்கை அகதி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சூலூர் அருகே குளத்தூர் பிரிவு பகுதியில் தனியார் கேட்டரிங் நி... மேலும் பார்க்க