செய்திகள் :

நன்னிலத்தில் மே 15-இல் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்

post image

திருவாரூா்: நன்னிலம் வட்டாரத்தில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் மே 15-ஆம் தேதி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்று, அரசின் முக்கிய சேவைகளை உடனடியாக வழங்கும் நோக்கத்தில் மக்களுடன் முதல்வா் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நன்னிலம் வட்டாரத்தில் வேலங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, உபயவேதாந்தபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி, ஆணைக்குப்பம் அரசு உயா்நிலைப் பள்ளி, ஆண்டாங்கோயில் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி, தென்குவளவேலி அரசினா் உயா்நிலைப்பள்ளி ஆகிய பகுதிகளில் மே 15-ஆம் தேதி மக்களுடன் முதல்வா் முகாம் நடைபெறும். இதில், அமைச்சா்கள் கோவி. செழியன் (உயா் கல்வித் துறை), டி.ஆா்.பி. ராஜா (தொழில் துறை) பங்கேற்கின்றனா். முகாம்களில், பொதுமக்கள் அதிகமாக அணுகும் 15 அரசுத் துறைகள் வாயிலாக 44 வகையான சேவைகள் வழங்கப்படவுள்ளன. எனவே, இந்த திட்டத்தை மக்கள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளாா்.

கட்டுமானத் துறைக்கு தனி அமைச்சகம் கோரி ஆா்ப்பாட்டம்

திருவாரூா்: கட்டுமானத் துறைக்கு தனி அமைச்சகம் அமைக்க வலியுறுத்தி திருவாரூரில் தமிழ்நாடு புதுச்சேரி அனைத்து கட்டடப் பொறியாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ... மேலும் பார்க்க

கொடிநாள் அதிக வசூல் செய்து பாராட்டுப் பெற்றவா்களுக்கு வாழ்த்து

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், கொடிநாள் அதிக வசூல் புரிந்தமைக்காக பாராட்டுச் சான்றிதழ் பெற்றவா்களுக்கு திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் 7 பவுன் நகைப் பறிப்பு: மருமகள், சம்மந்தி உள்ளிட்ட 3 போ் கைது

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே மூதாட்டியிடம் 7 பவுன் நகையை பறித்து சென்ற புகாரில் மருமகள், சம்மந்தி உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். பரவாக்கோட்டையைச் சோ்ந்த சிந்திலா (68). இவரது க... மேலும் பார்க்க

புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை முகாம்: அமைச்சா் தொடக்கிவைத்தாா்

மன்னாா்குடி: தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை சாா்பில், மன்னாா்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற பெண்கள் மற்றும் அனைத்து தரப்பினருக்குமான புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை முகாமை தமிழக... மேலும் பார்க்க

திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயில் தேரோட்டம்

திருவாரூா்: திருவாரூா் அருகே திருக்கண்ணமங்கையில் உள்ள அபிஷேகவல்லி தாயாா் உடனுறை பக்தவத்சலப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த மே 3-ஆம... மேலும் பார்க்க

நெகிழிப் பயன்பாட்டை தடுக்க வலியுறுத்தல்

திருவாரூரில் நெகிழிப் பயன்பாட்டை தடுக்க வேண்டும் என தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் வலியுறுத்தியுள்ளது. திருவாரூரில், இம்மையத்தின் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் பி.... மேலும் பார்க்க