‘நம்பவே முடியவில்லை தங்கச்சி...’ வருத்தத்தைப் பகிர்ந்த வெங்கட் பிரபு!
மறைந்த பாடகி பவதாரிணியின் பிறந்த நாளில் வெங்கட் பிரபு உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
பாடகியும் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி புற்றுநோயால் கடந்த ஆண்டு ஜன. 25 ஆம் தேதி இலங்கையில் காலமானார். மறைந்து ஓராண்டு கடந்த முதல் பிறந்த நாள் இன்று என்பதால் பவதாரிணியுடனான நினைவுகளைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும், இன்று இசையமைப்பாளர் இளையராஜா, இசைக்கலைஞர்களை நேரில் அழைத்து பவதாரிணிக்கான நினைவு நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார்.
இதையும் படிக்க: ஜேசன் சஞ்சய் படத்தின் அப்டேட்!
இந்த நிலையில், இயக்குநரும் பவதாரிணியின் சகோதரருமான வெங்கட் பிரபு பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், பவதாரிணியுடான தன் புகைப்படத்தை இணைத்து, “ஓராண்டு முடிந்ததை நம்பவே முடியவில்லை. பிறந்த நாள் வாழ்த்துகள் தங்கச்சி” என தன் வருத்தத்தை பகிர்ந்துள்ளார்.
Can’t believe it’s one year already happy bday thangachi #bhavatharinihttps://t.co/YSBPUWPQlE
— venkat prabhu (@vp_offl) February 12, 2025