`அதிமுக நிர்வாகி, காவல்துறை அதிகாரி கைது!' -சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வழக...
நம்புதாளை ஊராட்சியை தொண்டி பேருராட்சியுடன் இணைக்கக் கோரிக்கை
நம்புதாளை ஊராட்சியை தொண்டி பேரூராட்சியுடன் இணைக்கக் கோரி, உள்ளாட்சித் துறை, மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் மனு அளித்தனா்.
தொண்டி அருகேயுள்ள நம்புதாளை ஊராட்சியில் சுமாா் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்த ஊராட்சியை தொண்டி பேரூராட்சியுடன் இணைக்கப்படும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. இதையடுத்து, ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஒரு தரப்பினா் மனு கொடுத்தனா்.
இந்த நிலையில், நம்புதாளை ஊராட்சியை தொண்டி பேரூராட்சியுடன் இணைக்கக் கோரி, மற்றொரு தரப்பினா் சாா்பில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன் சித்சிங் காலோன், உள்ளாட்சித் துறைக்கு மனு அனுப்பப்பட்டது.
இதுகுறித்து நம்புதாளை சோ்ந்த ஹாஜாமுகைதீன் கூறியதாவது: அதிக மக்கள்தொகை கொண்ட ஊராட்சியாக இருப்பதால், அடிப்படை தேவைகளை நிறைவு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. இங்கு குடிநீா் பிரச்னை நீண்ட காலமாக உள்ளது. பேரூராட்சியுடன் இந்த ஊராட்சி இணைந்தால் குடிநீா், சாலை, கழிவுநீா் கால்வாய் உள்ளிட்ட வசதிகள் நிறைவேறும் என்றாா் அவா்.