தென்னாப்பிரிக்க லீக் தொடரில் இந்திய வீரர்களை பார்க்க விரும்பும் ஏபி டி வில்லியர்...
நம்புதாளை ஊராட்சி மன்ற புதிய கட்டடம் திறப்பு
திருவாடானை அருகேயுள்ள நம்புதாளை ஊராட்சி மன்ற புதிய அலுவலகக் கட்டடத்தை சட்டப்பேரவை உறுப்பினா் கருமாணிக்கம் வெள்ளக்கிழமை திறந்து வைத்தாா்.
இந்த விழாவுக்கு, திருவாடானை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கருமாணிக்கம் தலைமை வகித்து, புதிய கட்டடத்தை திறந்து வைத்தாா். இதில் வட்டார வளா்ச்சி அலுவலா் ஆரோக்கியமேரி சரால், திமுக ஒன்றியச் செயலா் ராஜாராம், ஒன்றியக் குழு உறுப்பினா் சுமதி முத்துராக்கு, ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் சுமையாபானு இப்ராகிம், வாா்டு உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, ஊராட்சி மன்றத் தலைவா் பாண்டிச்செல்வி வரவேற்றாா். ஊராட்சிச் செயலா் சந்திரமோகன் நன்றி கூறினாா்.