செய்திகள் :

நள்ளிரவில் உத்தரகண்டை புரட்டிப்போட்ட வெள்ளம்! 2 பேர் மாயம்!

post image

உத்தரகண்ட் மாநிலத்தில், நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 2 பேர் மாயமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமோலி மாவட்டத்தின், தாராலி நகரத்தில் நேற்று (ஆக.22) நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழையால், ஏற்பட்ட வெள்ளத்தால் அங்குள்ள வீடுகள் மற்றும் கடைகளின் உள்ளே வெள்ளநீர் புகுந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தாராலி முழுவதும் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட இடிபாடுகள் மற்றும் வாகனங்கள் சூழ்ந்து காணப்படும் நிலையில், சாக்வாரா மற்றும் செப்தோன் சந்தைப் பகுதியில் 2 பேர் மாயமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சாக்வாரா பகுதியைச் சேர்ந்த கவிதா (வயது 20) உள்பட 2 பேர் மாயமானதால், அவர்களைத் தேடும் பணிகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாராலியில் உள்ள முக்கிய கட்டமைப்புகள் அனைத்தும் வெள்ளத்தில் பலத்த சேதமடைந்துள்ளன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், வெள்ளம் ஏற்பட்ட பகுதியில் மாநில மீட்புப் படைகள் உடனடியாக களமிறக்கப்பட்டன. ஆனால், அந்நகரத்தை இணைக்கும் கார்னாப்ரயாக் - குவால்டம் நெடுஞ்சாலையில் இடிபாடுகள் சூழ்ந்து முடங்கியுள்ளதால், மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தங்கவைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரண முகாம்கள் தற்போது அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், மூன்று மண்டலங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, உத்தரகாசியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, ஒருவர் பலியானதுடன் சுமார் 65 பேர் மாயமானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மோடி அமைச்சரவையில் குற்றப் பின்னணி கொண்ட 39% பேர் மீது 130-ஆவது சட்டப் பிரிவு பாயுமா?

Two people have been reported missing in Uttarakhand due to floods caused by heavy rains since midnight.

ராஜ் தாக்கரேவை திட்டி விடியோ பதிவிட்ட இளைஞர் கைது

மதுபோதையில் ராஜ் தாக்கரேவை திட்டி விடியோ பதிவிட்ட இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். மகராஷ்டிர மாநிலம், அந்தேரியைச் சேர்ந்த கடைக்காரர் சுஜித் துபே(30). இவர் மதுபோதையில் மகாராஷ்டிர நவநிர்மான் சேனை(எம்.... மேலும் பார்க்க

நவீன் பட்நாயக்கை சந்தித்து ஒடிசா முதல்வர் நலம் விசாரிப்பு

புவனேஸ்வரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக்கை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து முதல்வர் மோகன் சரண் மஜ்ஹி நலம் விசாரித்தார்.நவீன் நிவாஸ் எனப்படும் பட்நாயக்கின் இல்லத்தில் சுமார் 15 நிமிடங்கள் ... மேலும் பார்க்க

சட்டவிரோத பந்தய வழக்கு: கர்நாடக எம்எல்ஏ வீரேந்திரா கைது!

சட்டவிரோத ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பந்தய மோசடி தொடர்பாக சித்ரதுர்காவைச் சேர்ந்த கர்நாடக எம்எல்ஏ கே.சி. வீரேந்திராவை அமலாக்கத்துறை சனிக்கிழமை அதிரடியாகக் கைது செய்தது. பந்தய மோசடி தொடர்பாக அமலாக்கத்துற... மேலும் பார்க்க

ஹிமாசலில் தீவிரமடையும் கனமழை! 339 சாலைகள் மூடல்!

ஹிமாசலப் பிரதேசத்தில் தொடர் கனமழை பெய்து வருவதால், அம்மாநிலத்தில் 339 சாலைகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹிமாசலப் பிரதேசத்தின், பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. ப... மேலும் பார்க்க

வாரம் ஒன்று.. ஆண்டுக்கு 50 ராக்கெட் ஏவ வேண்டும்: இலக்கு நிர்ணயித்த மோடி!

நாட்டின் நிர்வாகத்தையும் அன்றாட வாழ்க்கையையும் மாற்றுவதில் விண்வெளி தொழில்நுட்பத்தின் பங்கை பிரதமர் மோடி எடுத்துரைத்தார். புது தில்லியில் நடந்த தேசிய விண்வெளி தின கொண்டாட்டத்தில் கானொளி வாயிலாக பிரதமர... மேலும் பார்க்க

அயோத்தியா, பிரயாக்ராஜ் தொடர்ந்து பெயர் மாறப்போகும் நகரம் இதுவா?

உத்தரப்பிரதேசத்தில் அயோத்தியா, பிரயாக்ராஜ் நகரங்களைத் தொடர்ந்து அலிகார் நகரின் பெயரை மாற்ற வேண்டும் என்று மாநில துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மௌரியா வேண்டுகோள் வைத்துள்ளார்.ஹிந்து கௌரவ் நாள் கொண்டாட்டத்... மேலும் பார்க்க