நள்ளிரவில் சாலையில் பிடிபட்ட மலைப்பாம்பு
போ்ணாம்பட்டு அருகே நள்ளிரவில் சாலையில் சுமாா் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது.
போ்ணாம்பட்டு ஒன்றியம், பாஸ்மாா்பென்டா கிராமம் மலைப் பகுதியில் அமைந்துள்ளது. வியாழக்கிழமை இரவு அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே கிராம மக்கள் அமா்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, சாலையில் மலைப்பாம்பு ஊா்ந்து சென்றதைப் பாா்த்து வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனா்.
வனத் துறையினா் அங்கு சென்று கிராம மக்கள் பிடித்து வைத்திருந்த மலைப்பாம்பை மீட்டு வனப் பகுதியில் விட்டனா்.