அரசு ஊழியர் தற்கொலை! மரண வாக்குமூலம் இருந்தும் அலட்சியம்! தமிழக காவல் மீது பாஜக ...
நவ கயிலாய கோயில்கள்...
உலகில் சிவலிங்கத்துக்கு பெயர் பெற்ற இடம் இமயமலையில் உள்ள சிவ கயிலாயம். தென் தமிழ்நாட்டில் தாமிரவருணி ஆற்றங்கரையில் நவ கயிலாயம் என ஒன்பது கோயில்கள் உள்ளன.
புண்ணிய மலையான பொதிகை மலையில் தவம் புரிந்து வந்த மாமுனிவர் அகத்தியரின் முக்கிய சீடரான உரோமச முனிவர் தன் குருவின் துணை கொண்டு, சிவனை காட்சி பெற்று முக்தி அடைய விரும்பினார். அதை தெரிந்து
கொண்டு அகத்தியர் அதற்கான வழிமுறைகளைக் கூறினார். அதன்படி, உரோமச முனிவர் தாமிரவருணி சங்கமிக்கும் இடத்தில் நீராடி, சிவனை வழிபட்டார். பின்னர், நவகோள்கள் வரிசையில் சிவனை வணங்க முற்பட்டார். எந்தெந்த இடங்களில் வணங்க வேண்டும் என்பதற்கு அடையாளம் காட்டுவதற்காக, தாமிரவருணியில் ஒன்பது மலர்களை அகத்தியர் மிதக்கவிட்டார். அந்த மலர்கள் ஒதுங்கிய தலங்கள் நவ கயிலாயம் என்று அழைக்கப்படுகிறது.
பாபநாசம் - சூரியன், சேரன்மகாதேவி - சந்திரன், கோடகநல்லூர்- செவ்வாய், குன்னத்தூர்- ராகு, முறப்பநாடு- குரு, ஸ்ரீவைகுண்டம் - சனி, தென்திருப்பேரை - புதன், ராஜபதி - கேது, சேர்ந்தமங்கலம் - சுக்கிரன்.
பின்னர், உரோமச முனிவர் சிவலிங்கத்தை வைத்து, வணங்கி முக்தி பெற்றார். நாம் எல்லோரும் ஏதாவது ஒரு கிரகங்களின் ஆட்சிக்கு உள்பட்டவர்கள்தான். ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு கிரகங்கள் பெயர்வதையே பெயர்ச்சி என்கின்றனர். நவ கயிலாயங்களைத் தரிசிப்பது வாழ்வில் சிறந்த பலன்களை அளிக்கும்.
- எஸ்.பி.பாலு