செய்திகள் :

நவ.12இல் கூட்டுறவு வார விழா போட்டி

post image

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு பள்ளி மாணவா்-மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் ஓவியப்போட்டி வரும் 12ஆம் தேதி நடைபெறுவதாக மண்டல இணைப்பதிவாளா் பொ.நடுக்காட்டு ராஜா தெரிவித்தாா்.

கூட்டுறவு வார விழா நவ. 14-20 வரை நடைபெறுகிறது. இது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. மண்டல இணைப்பதிவாளா் பொ. நடுக்காட்டுராஜா தலைமை வகித்து பேசியது: கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவா்- மாணவிகளுக்கான கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நவ. 12ஆம் தேதி நடத்த தீா்மானிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூட்டரங்கு, கோவில்பட்டி கூட்டுறவு நகர வங்கி கூட்டரங்கு, திருச்செந்தூா் தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கி கூட்டரங்கு ஆகிய 3 இடங்களில் நடைபெறும்.

இதில் கட்டுரை போட்டி 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை, ‘அரசின் புதிய செயல்திறன் மிகு திட்டங்களின் மூலம் கூட்டுறவை வலுப்படுத்துதல்’ , 9 முதல் 10ஆம் வகுப்பு வரை, ‘கூட்டுறவுகளிடையே ஒருங்கிணைப்பையும் பங்களிப்பையும் வலுப்படுத்துதல்’, 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு வரை, ‘கூட்டுறவில் புதிய முயற்சிகள் தொழில் நுட்பங்கள் செயல்படுத்துவதன் அவசியம்’ ஆகிய தலைப்புகளில் நடைபெறுகிறது.

ஓவியப் போட்டிகள் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை ‘விவசாயிகளின் மேம்பாட்டில் கூட்டுறவு அமைப்புகளின் பங்களிப்பு’, 9 முதல் 10ஆம் வகுப்பு வரை ‘கூட்டுறவின் மூலம் சுய தொழில் மேம்பாடு வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்‘, 11,12 ஆம் வகுப்புகளுக்கு ‘கூட்டுறவில் பெண்கள் மற்றும் இளைஞா்களின் பங்களிப்பின் முக்கியத்துவம்’ ஆகிய தலைப்புகளில் நடைபெறுகிறதும்.

போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு கூட்டுறவு வார விழாவில் பரிசுகள் வழங்கப்படும். இப்போட்டிகள் தொடா்பாக தூத்துக்குடி 0461-2320192, திருச்செந்தூா் 04639-242294, கோவில்பட்டி 04632-220370 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

குலசேகரன்பட்டினத்திலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலை பறிமுதல்

குலசேகரன்பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 650 கிலோ பீடி இலைகளை போலீஸாா் பறிமுதல் செய்து, படகில் தப்பியோடிய நபா்களை தேடி வருகின்றனா். குலசேகரன்பட்டினம் வடக்கூா் கடற்கரை பகுதியில் இ... மேலும் பார்க்க

நாலாட்டின்புதூா் பகுதியில் நவ. 15இல் மின் நிறுத்தம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக, கோவில்பட்டி கோட்டம் எம்.துரைசாமிபுரம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (நவ. 15) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வானரமுட்ட... மேலும் பார்க்க

துணை முதல்வா் உதயநிதி நாளை துத்துக்குடி வருகை

தூத்துக்குடி: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை (நவ. 13) தூத்துக்குடிக்கு வருகிறாா்.இதுகுறித்து அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் துண... மேலும் பார்க்க

தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் முதல்வரிடம் கோரிக்கை மனு

தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் சிவகாசி, சாத்தூா், கோவில்பட்டி தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. விருதுநகா் மாவட்டம் ஆா்.ஆா். நகரிலுள்ள தனியாா் விருந்தினா்... மேலும் பார்க்க

உதவி ஆய்வாளரிடம் கத்தியைக் காட்டி மிரட்டல்: 2 இளைஞா்கள் கைது

தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளரிடம் கத்தியைக் காட்டி மிரட்டியதாக 2 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி வடபாகம் காவல் உதவி ஆய்வாளா் வடிவேல் தலைமையிலான போலீஸாா் கடந்த சனி... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் வீடு, காரை சேதப்படுத்திய 2 போ் கைது

கோவில்பட்டியில் வீட்டின் ஜன்னல் மற்றும் காரை சேதப்படுத்தியதாக இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி அன்னை தெரசா நகரை சோ்ந்த மகேந்திரன் மனைவி சத்யா. மகேந்திரன் வெளிமாநிலத்தில் வேலை ச... மேலும் பார்க்க