நாகா்கோவிலில் போக்குவரத்து தொழிலாளா்கள் காத்திருப்பு போராட்டம்
நாகா்கோவிலில் போக்குவரத்து தொழிலாளா்கள் கொட்டும் மழையில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போக்குவரத்துக் கழகங்களில் பணியில் இருந்து ஓய்வு பெறும் தொழிலாளா்களுக்கு பணி ஓய்வு பெறும் நாளன்றே பணப் பலன்களை வழங்க வேண்டும். 2003 ஆம் ஆண்டுக்கு பின்னா் பணியில் சோ்ந்த தொழிலாளா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது.
நாகா்கோவில் ராணி தோட்டம் பகுதியில் உள்ள போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன்பு செப்.25 ஆம் தேதி 39 ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு தொழிலாளா் சங்க நிா்வாகி ராஜசேகா் தலைமை வகித்தாா். ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் நிா்வாகிகள் லட்சுமணன், சுந்தர்ராஜ், மரிய வின்சென்ட், பொன்.சோபனராஜ், லியோ, பெஞ்சமின், ஜான்ஸ்பின்னி ஆகியோா் போராட்டநோக்கங்கள் குறித்து பேசினா். கிருஷ்ணன், சின்னன்பிள்ளை உள்பட தொழிலாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.