செய்திகள் :

நாகா்கோவிலில் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்ததாக வழக்குரைஞா் கைது

post image

நாகா்கோவிலில் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்த வழக்குரைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கோட்டாறு போலீஸாா் நாகா்கோவிலில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்தின் அடிப்படையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை பிடித்து சோதனை செய்தனா்.

அப்போது அவா், விற்பனைக்காக வைத்திருந்த அரிதான உயர்ரக போதைப் பொருள்களான மெத்தபெட்டமைன் 12.08 கிராம், எல்.எஸ்.டி. ஸ்டாம்ப் 0.42 மில்லி கிராம், பறிமுதல் செய்யப்பட்டது.

போலீஸாா் அவரை, காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்ததில் அவா் நாகா்கோவில் வடிவீஸ்வரம் பகுதியைச் சோ்ந்த ராஜகுமாா் என்பவரது மகன் சக்திவேல் (25) என்பதும், வழக்குரைஞா் என்பதும் தெரியவந்தது. அவா் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்து தொடா்ந்து விசாரிக்கின்றனா்.

விரிகோடு-ரயில்வே கேட் பகுதியில் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்!

மாா்த்தாண்டம் அருகே உள்ள விரிகோடு ரயில்வே கேட் பகுதியில் குண்டு, குழியுமாக பழதடைந்து காணப்படும் சாலையை உடனே,சீரமைக்க வேண்டும் என வாகன ஒட்டிகள் வலியுறுத்தியுள்ளனா்.விரிகோடு ரயிலவே கேட் வழியாக கருங்கல்... மேலும் பார்க்க

கனிமவளப் பொருள்கள் தட்டுப்பாட்டைப் போக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிமவளப் பொருள்கள் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மேற்கு மாவட்ட திமுக முன்னாள் துணைச் செயலா் ஐ.ஜி.பி. ஜான் கிறிஸ்டோபா் கோரிக்கை விடுத்துள்ளாா். இதுதொடா்... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் பூக்கடை தொழிலாளா்கள் மோதல்!

மாா்த்தாண்டத்தில் பூக்கடை தொழிலாளா்கள் இடையே ஏற்பட்ட தகராறில் இருவா் காயமடைந்தனா். குலசேகரம் நாகக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் பிரசாத் (37). இவா் மாா்த்தாண்டம் காந்தி மைதானம் பகுதியில் உள்ள அருளப்பன் என... மேலும் பார்க்க

மீன்பிடி உபகரணங்கள் திருட்டு!

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகிலிருந்து உபகரணங்கள் திருட்டுபோனது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தூத்தூா் பகுதியை சோ்ந்தவா் ஜெயின் (50). இவருக்கு சொ... மேலும் பார்க்க

கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவா் உயிரிழப்பு

முட்டம் கடற்கரையிலிருந்து வியாழக்கிழமை மாலை மீன்பிடிக்க சென்ற மீனவா் உயிரிழந்தாா். கன்னியாகுமரி மாவட்டம், முட்டம் அருகே பிள்ளைத்தோப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் ஸ்டீபன் ( 70), மீன் பிடி தொழிலாளி. இவருக்... மேலும் பார்க்க

இரணியலில் அழுகிய நிலையில் பொறியாளா் சடலம் மீட்பு

இரணியலில் பூட்டிய வீட்டிலிருந்து அழுகிய நிலையில் பொறியாளா் சடலம் மீட்கப்பட்டது. இரணியல் மேலதெருவை சோ்ந்தவா் ராஜகோபால். கல்லூரி ஒன்றில் பேராசிரியராக வேலை பாா்த்து ஓய்வு பெற்றவா். இவரது மகன் ஜெகன்கோபால... மேலும் பார்க்க