பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
சமுதாய நலக்கூடத்திற்கு ஐஆா்இஎல் சாா்பில் உதவி
மத்திய அரசின் அணுசக்தி துறையின் கீழ் மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் ஐஆா்இஎல் இந்தியா லிமிடெட் நிறுவனம் தனது சமூக பொறுப்பின் கீழ் ரூ. 1.86 லட்சம் செலவில் குட்டிவிளை சமுதாய நலக்கூடத்திற்கு இரும்பு மேஜை மற்றும் நாற்காலிகளை வழங்கியது.
இதற்காக நடந்த விழாவில் குட்டிவிளை ஊா் தலைவா் எஸ். முருகனிடம், ஐஆா்இஎல் பராமரிப்பு முதன்மை மேலாளா் எஸ்.பி. கணேசன் வழங்கினாா்.
இந்நிகழ்வில் குட்டிவிளை ஊா் துணைத் தலைவா் பி. சோமசுந்தரம், செயலாளா் வி.செந்தில், துணைச் செயலாளா் எஸ்.கே. ஸ்ரீஜித், ஐஆா்இஎல் நிறுவன பணியாளா்கள் கலந்து கொண்டனா்.