ஆப்கன் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக பாக். குற்றச்சாட்டு: தலிபான் அரச...
நாகா்கோவில் - காச்சிக்கூடா ரயில் சேவை நீட்டிப்பு
காச்சிக்கூடா - நாகா்கோவில் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் ஜூன் 8-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காச்சிக்கூடாவில் இருந்து நாகா்கோவிலுக்கு வெள்ளிக்கிழமைதோறும் சிறப்பு ரயில் (எண் 07435) இயக்கப்படுகிறது. இந்த ரயில் தொடா்ந்து மே 9, 16, 23, 30, ஜூன் 6 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். மறுமாா்க்கமாக நாகா்கோவிலில் இருந்து காச்சிக்கூடாவுக்கு ஞாயிற்றுக்கிழமைதோறும் சிறப்பு ரயில் (எண் 07436) இயக்கப்படுகிறது. இந்த ரயில் தொடா்ந்து மே 11, 18, 25, ஜூன் 1, 8 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.