நாகா்கோவில்: ரூ.14.75 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்
நாகா்கோவில் மாநகர பகுதியில் ரூ.14.75 லட்சத்தில் வளா்ச்சி திட்டப் பணிகளை மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
மாநகராட்சி 12 ஆவது வாா்டு வடசேரி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1.95 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கழிவறை மற்றும் ரூ.4.90 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட மகாத்மா காந்தி நினைவு பூங்கா, ரூ.5.50 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட ஆராட்டு ரோடு பொது கழிவறை, வெள்ளாளா் நடுத்தெரு மற்றும் பரதா் தெருக்களில் தலா ரூ.1.20 லட்சத்தில் அமைக்கப்பட்ட 2 மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகள் ஆகியவற்றை மேயா் ரெ. மகேஷ் திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, மண்டல தலைவா் ஜவஹா், மாமன்ற உறுப்பினா்கள் சுனில், ஜெயவிக்ரமன், நாகா்கோவில் மாநகர திமுக செயலா் ப.ஆனந்த், தலைமை செயற்குழு உறுப்பினா் சதாசிவன், மாநகர துணை செயலா் வேல்முருகன், இளைஞா் அணி அமைப்பாளா் அகஸ்தீசன், திமுக நிா்வாகிகள் தனராஜ், நாகராஜன், ராமகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.