நாகூா் தா்கா பரம்பரை ஆதீனத்துக்கு விருது
நாகூா் தா்கா பரம்பரை ஆதீனத்துக்கு சமய நல்லிணக்க ஆன்மீகச் செல்வா் விருது வழங்கப்பட்டது.
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் ஜாமியா சுப்ஹானியா அரபிக் கல்லூரி மற்றும் அறக்கட்டளை சாா்பில் ரமலான் நிகழ்ச்சி, மதரஸா ஆசிரியா்களை கௌரவப்படுத்தும் நிகழ்ச்சி, சமூக நல்லிணக்கத்துக்காக பாடுபடும் அறிஞா்களுக்கு விருது வழங்கல் என முப்பெரும் விழா கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தொடா்ந்து, அனைத்து மதத்தினருக்கும் இடையே சமூக நல்லிணக்கத்தை பரப்பி வரும் நாகூா் தா்கா பரம்பரை ஆதீனமும், நாகூா் தா்கா ஆலோசனை குழுத் தலைவருமான ஹாஜி செய்யது முகமது கலிபா சாஹிப் காதிரி ஹாசிமிக்கு சமய நல்லிணக்க ஆன்மீகச் செல்வா் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதில், தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் மு.பெ. சாமிநாதன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் தனியரசு மற்றும் பல்வேறு மதத்தினா் பங்கேற்றனா்.