நாகையில் நகல் எரிப்பு போராட்டம்
பாலியல் வன்முறைக்கு ஆதரவாக தீா்ப்பு வழங்கியதாக எதிா்ப்பு தெரிவித்து, நாகையில் இந்திய மாதா் தேசிய சம்மேளம் சாா்பில் தீா்ப்பின் நகல் எரிப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நாகை அவுரித் திடலில் இந்திய மாதா் தேசிய சம்மேளன மாவட்டத் தலைவா் மேகலா தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அகமதாபாத் நீதிமன்றத்தில், பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு ஆதரவாக தீா்ப்பு வழங்கப்பட்டதாகக் கூறி, அத்தீா்ப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினா்.
தொடா்ந்து, நீதிமன்ற தீா்ப்பின் நகல் எரிக்கப்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் தண்ணீா் ஊற்றி தீயை அணைத்தனா்.
இப்போராட்டத்தில் மாவட்டச் செயலா் எஸ். மேகலா, சிபிஐ மாவட்டச் செயலா் சிவகுரு பாண்டியன், மாநிலக் குழு உறுப்பினா் செல்வம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் வி. சரபோஜி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.