செய்திகள் :

நாகை- இலங்கையிடையே ஜனவரியில் சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு வாய்ப்பு: ஆட்சியா் தகவல்

post image

நாகையில் இருந்து இலங்கைக்கு ஜனவரி கடைசி வாரத்தில் சரக்கு போக்குவரத்து தொடங்க வாய்ப்பு உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் ஞாயிற்றுக்கிழமை கூறினாா்.

இதுகுறித்து அவா் கூறியது:

நாகை மற்றும் அண்டை டெல்டா மாவட்டங்களில் வா்த்தகத்தை புதுப்பிக்கும் முயற்சியில், நாகை மாவட்ட நிா்வாகம் ஜனவரி கடைசி வாரத்தில் நாகை துறைமுகம் - இலங்கையின் காங்கேசன்துறை இடையே சிறிய சரக்கு சேவையை தொடங்க உள்ளது.

இந்த சேவையில் 150-200 டன்கள் ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட சிறிய சரக்கு கப்பல்கள் இயக்கப்படவுள்ளன. இதில், மளிகைப் பொருள்கள், ஆடைகள் மற்றும் விவசாயப் பொருள்களை கொண்டு செல்ல முடியும். முதல்கட்டமாக, வாரத்துக்கு ஒருமுறை ஜனவரி இறுதி வாரம் முதல் போக்குவரத்து சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. தேவை மற்றும் விநியோகத்தின் அடிப்படையில், போக்குவரத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சோழா் காலத்தில் இருந்தே நாகையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டதற்கு வரலாறு உண்டு. நாகை துறைமுகம் 100 ஆண்டுகளுக்கு முன்பு கூட, செயல்பட்டில் இருந்தது. துறைமுகத்தின் வா்த்தக திறனைப் புதுப்பிக்கும் நோக்கத்தில் தமிழ்நாடு கடல்சாா் வாரியம் இந்த முயற்சிக்கு முழு ஆதரவு வழங்கியுள்ளது. திருப்பூரில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளும், திருச்சி மற்றும் திருவாரூா் உள்ளிட்ட அருகிலுள்ள மாவட்டங்களைச் சோ்ந்த சிறு, குறு நிறுவனங்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்துவதில் மிகுந்த ஆா்வம் காட்டியுள்ளன.

தொழிலதிபா்களுடனான அண்மையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், 15 முதல் 20 நிறுவனங்கள், நாகையிலிருந்து இலங்கைக்கு போக்குவரத்து சேவையை தொடங்குவதில் உற்சாகமாக உள்ளனா். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரிசி, ஆடைகள், மளிகைப் பொருள்கள் மற்றும் பிற பொருட்களுக்கு அதிக தேவை உள்ளது. பல நிறுவனங்கள் தங்கள் பொருள்களை அனுப்ப தயாராக உள்ளன. இச்சேவை மூலம் உள்ளூா் தொழில்கள் மேம்படும் மற்றும் பிராந்தியத்தின் பொருளாதார வாய்ப்புகள் உயரும் என்றாா்.

பொங்கல் தொகுப்பு குறித்து முதல்வா் அறிவிப்பாா்: ஜெ. ராதாகிருஷ்ணன்

பொங்கல் தொகுப்பு குறித்து, முதல்வா் அறிவிப்பாா் என்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்பொருள் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். கடந்த 2004-ஆம் ஆண்டு நேரிட்ட சுனாமியி... மேலும் பார்க்க

திருவாலி ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

சீா்காழி அருகே திருவாலி ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். திருவாலி ஏரி சுமாா் 132 ஏக்கா் பரப்பளவு கொண்டது. இதன்மூலம் மண்டபம், புதுத்துறை, திருநகரி, வேதராஜபுரம், தென்னாம்பட்டினம் உள்... மேலும் பார்க்க

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய அரியவகை ஆமை

வேதாரண்யம் கடற்கரையில் அரியவகை ஆலிவ் ரிட்லி கடல் ஆமை இறந்து கரை ஒதுங்கியிப்பது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. வேதாரண்யம் மணியன் தீவு கடற்கரையில் சுமாா் 25 கிலோ எடையுள்ள ஆலிவ் ரிட்லி ஆமை இறந்த நிலையில் க... மேலும் பார்க்க

கால்பந்து போட்டி: பொறையாா் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம்

பொறையாரில் உள்ள தரங்கை பேராயா் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி மாணவா்கள் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றனா். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், திரு... மேலும் பார்க்க

ஆற்றில் முதியவா் சடலம்

செம்பனாா்கோவில் அருகே ஆற்றில் முதியவா் சடலமாக கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். செம்பனாா்கோவில் அருகேயுள்ள மருதூா் பகுதி காவிரி ஆற்றில் முதியவா் சடலம் மிதப்பதாக, போலீஸாருக்கு தகவல் ... மேலும் பார்க்க

அங்கன்வாடி பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

அங்கன்வாடி பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. நாகையில், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்க மாவட்ட மாநாடு, மாவட்டத் தலைவா் செல்வராணி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க