செய்திகள் :

நாடாளுமன்றத்தின் எதிரே தீக்குளித்து தற்கொலை முயற்சி!

post image

புது தில்லி: நாடாளுமன்ற கட்டடத்தின் எதிரே அமைந்துள்ள ரயில்வே பவனில் தீக்குளித்த நபரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று(டிச. 25) மாலை நாடாளுமன்றத்தின் எதிரே வந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், திடீரென தன்னைத் தானே தீப்பற்றிக் கொண்டார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த ரயில்வே காவலர்களும் உடனிருந்தோரும் அவரது உடலில் பற்றியெறிந்த தீயை உடனடியாக அணைக்க முற்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்களும் தீயை அணைத்து அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளனர். தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் அருகாமையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த நபரிடமிருந்து பாதி எரிந்த நிலையில் கிடைத்துள்ள கடிதத்தை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2024: லாபம் அளித்த முதல் 7 நிறுவனப் பங்குகள்!

2024 ஆம் ஆண்டின் இந்தியப் பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களுடன் அமைந்தது. குறிப்பாக, நவம்பர் முதல் டிசம்பர் வரையில் பெரும்பாலும் சரிவையே கொண்டிருந்தது. இருப்பினும், சில நிறுவனங்கள் மட்டும் முதலீட்டாளர்களுக... மேலும் பார்க்க

8 வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்து கொலை!

வாரணாசியில் சிறுமியை பாலியல் சீண்டலில், கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.உத்தரப் பிரதேசத்தில் வாரணாசியில் ஒரு பள்ளியருகே 8 வயது சிறுமி ஒருவர் அரை நிர்வாணமாக, இறந்த நிலையில் சாக்குப்பையில் இருப்ப... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவைக் கண்டித்த கணவர் கொலை!

மகாராஷ்டிரத்தில் திருமணம் மீறிய உறவில் இருந்த மனைவியைக் கண்டித்த கணவரை மனைவி கொலை செய்த வழக்கில் பெண் கைது செய்யப்பட்டார்.புணேவில் பாஜக எம்.எல்.சி.யான யோகேஷ் திலேக் என்பவரின் மாமா சதீஷ் வாக் (51), டிச... மேலும் பார்க்க

ஹிந்தி நடிகருக்கு முதல்வர் பதவியா?

ஹிந்தி நடிகர் சோனு சூட்டுக்கு முதல்வர், துணை முதல்வர், எம்.பி. பதவிகளுக்கான வாய்ப்புகள் கிடைத்ததாகக் கூறியுள்ளார். பிரபல ஹிந்தி நடிகரும் தயாரிப்பாளருமான சோனு சூட், பொது மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்த... மேலும் பார்க்க

இந்தியா கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலக்கப்படும்: ஆம் ஆத்மி

தில்லியில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவாலை தேசவிரோதி என்று அழைத்ததுடன், அவர்களுக்கு எதிரான வெள்ளை அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்தியா ... மேலும் பார்க்க

பாஜக எம்எல்ஏ மீது முட்டை வீச்சு!

கர்நாடகத்தில் பாஜக எம்எல்ஏ மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பெங்களூருவில் புதன்கிழமை நடைபெற்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாய்யின் பிறந்தநாள் நிகழ்ச்சியின் போது, ​​முன்னாள் அமைச்... மேலும் பார்க்க