நோயாளியுடன் டிராபிக்கில் சிக்கிய ஆம்புலன்ஸ்; ஓடி ஓடி உதவிய போலீஸ்; வைரல் வீடியோவ...
நாடாளுமன்றம் நான்காவது வாரமாக முடங்கியது!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் நான்காவது வாரத்தின் முதல் நாளிலேயே எம்பிக்கள் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21 ஆம் தேதி காலை தொடங்கியது. முதல் நாளில் இருந்து ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல், பிகார் வாக்காளர் சிறப்பு திருத்தம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து உடனடியாக விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதம் நடத்தப்பட்ட நிலையில், பிகார் வாக்காளர் சிறப்பு திருத்தம் குறித்து உடனடியாக விவாதிக்கக் கோரி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை எம்பிக்கள் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், வாக்குத் திருட்டு குறித்து ராகுல் காந்தி எழுப்பிய குற்றச்சாட்டை விவாதிக்கக் கோரி நான்காவது வாரத்தின் முதல் நாளான இன்று எதிர்க்கட்சி எம்பிக்கள் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியிருந்தனர்.
ஆனால், இரு அவைத் தலைவர்களும் அனுமதி மறுத்ததால் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபடத் தொடங்கினர்.
இதையடுத்து, இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து நான்காவது வாரமாக எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருவதால், அவை அலுவல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.