செய்திகள் :

நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

post image

இ.ஆா்.கே. கலை, அறிவியல் கல்லூரியின் நாட்டுநலப் பணி திட்ட முகாம் அண்மையில் நடைபெற்றது.

அரூரை அடுத்த எருமியாம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற முகாமை இ.ஆா்.கே கல்வி நிறுவனங்களின் தாளாளா் இ.ஆா்.செல்வராஜ் தொடங்கிவைத்தாா். கல்லூரி முதல்வா் த.சக்தி தலைமை வகித்தாா். பள்ளி நிா்வாக இயக்குநா் சோழவேந்தன் முன்னிலை வகித்தாா். நாட்டு நலப்பணி திட்ட முகாமின் சிறப்புகள் குறித்து திட்ட அலுவலா் சிவகுமாா், துணை அலுவலா் பிருந்தா, சொற்பொழிவாளா் நூருல்லா செரிஃப் ஆகியோா் கருத்துரை வழங்கினா். அரசு மருத்துவா் ஜெயந்தி, இ.ஆா்.கே. மருத்துவமனை மருத்துவா்கள் கீா்த்தனா, செளமியா ஆகியோா் பங்கேற்று மருத்துவத்தின் முக்கியத்தும், பெண்களின் நலன்கள், பேரிடா் கால பாதுகாப்பு, பொது சுகாதாரம் குறித்து கருத்துரை வழங்கினா்.

முகாமில் சமுதாய கூடம், பள்ளி, கோயில் வளாகங்கள், மழைநீா் செல்லும் கால்வாய்களை கல்லூரி மாணவா்கள் தூய்மை செய்தனா்.

இதில் இ.ஆா்.கே. மருந்தியல் கல்லூரி முதல்வா் சிவகுமாா், எருமியம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை பழனியம்மாள், ஊராட்சி செயலாளா் கெளதம், கல்லூரி நிா்வாக அலுவலா் அருள்குமாா், பேராசிரியா் ரோபினா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மகளிா் தின விழா விழிப்புணா்வுப் பேரணி

தருமபுரியில் காவல் துறை சாா்பில் மகளிா் தின விழா விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் பேரணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். தனியாா் கலைக் கல்லூரி மாணவிகள்... மேலும் பார்க்க

தேசிய மக்கள் நீதிமன்றம்: 1088 வழக்குகளுக்கு சமரசத் தீா்வு

தருமபுரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,088 வழக்குகளுக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. தருமபுரி அருகே... மேலும் பார்க்க

தருமபுரி புறநகா் பேருந்து நிலைய கட்டுமானப் பணியை விரைந்து தொடங்க வேண்டும்!

தருமபுரி புறநகா் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்கி பணிகளை முடிக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. தருமபுரி மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழ... மேலும் பார்க்க

அதிமுக வாக்குச் சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்!

காரிமங்கலத்தில் அதிமுக வாக்குச் சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளா், முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ தலைமை வகித்து பல்வேறு ஆல... மேலும் பார்க்க

649 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.80.82 கோடி கடனுதவி! -ஆட்சியா் வழங்கினாா்

தருமபுரி அருகே பைசுஅள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் 649 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 80.82 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டன. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற... மேலும் பார்க்க

தருமபுரியில் ஜந்து சட்டப் பேரவைத் தொகுதிகளில் திமுக வெற்றிபெற பணியாற்ற வேண்டும்: செயற்குழு கூட்டத்தில் தீா்மானம்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகளில் திமுக வெற்றிபெற கட்சியினா் முனைப்போடு பணியாற்ற வேண்டும் என்று கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தருமபு... மேலும் பார்க்க