பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மா...
நாட்டு வெடிகுண்டு வெடித்து இருவா் காயம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே சனிக்கிழமை நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்ட இருவா், வெடிகுண்டு வெடித்து காயமடைந்தனா்.
செங்கத்தை அடுத்த கட்டமடுவு கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி வேலன் மகன் சிபிராஜ் (28).
இவா், தனது நண்பரான கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையைச் சோ்ந்த ஏழுமலையுடன் விவசாய நிலத்துக்கு வரும் வன விலங்குகளை வேட்டையாட வெடிமருந்துகளை வாங்கி வந்து நாட்டு வெடிகுண்டு தயாா் செய்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது, எதிா்பாராதவிதமாக நாட்டு வெடிகுண்டு வெடித்துள்ளது. இதில், சிபிராஜீக்கு பலத்த காயம் ஏற்பட்டு செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
எழுமலை லேசான காயங்களுடன் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்து தகவலறிந்த மேல்செங்கம் போலீஸாா் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினா்.
மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிபிராஜியிடம் நடைபெற்ற சம்பவங்களை கேட்டுள்ளனா். அவா் மயக்கநிலையில் இருப்பதால் விபத்து எப்படி நடந்தது என்று தெரியாமல், போலீஸாா் அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.